இன்னும் ஏன் என்னையே தொல்ல பன்றீங்க.. கடுப்பான தோனி !!
கேப்டன் கூல் என்ற பெயரெடுத்த தோனியே பத்திரிக்கையாளர்களால் கடுப்பான சம்பவம் நடந்தேறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாக முன்வந்து விலிகி கொண்ட தோனி தற்போது உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று சட்டீஸ்கரை வீழ்த்தியது.
இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியிடம் கேள்வி கேட்க பத்திரிக்கையாளர் சிலர் முயற்சித்துள்ளனர்.
ஆனால் பத்திரிக்கையாளர்களை சந்திக்க தோனி மறுத்தாலும் விடாமல் அவர்கள் தோனியை துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான தோனி, இன்னுமா என்னை இம்சை பண்ணுறீங்க, போங்க வீட்டுக்கு போய் தூங்குங்க,’ என கடுப்பாக தெரிவித்துள்ளார்.
댓글