திமுக எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு : அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை?
சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 10.45 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த ரகளையைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம், மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு ஆகியவற்றை குறித்தும் ஆலோசிக்கபட உள்ளதாக தெரிகிறது.மேலும், தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதால், ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Comments