பன்னீர் செல்வத்திற்கு தான் எங்கள் ஆதரவு; தி.மு.க அதிரடி அறிவிப்பு
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தி.மு.க வின் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு தான் என்று திமுக வின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார்.
அதிமுக என்ற பேரியக்கம் தற்போது இரண்டாக உடைந்துள்ள நிலையில் ஆட்சியை எந்த அணி கைப்பற்றப்போகிறது என்ற பரபரப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. தனி ஆளாக சசிகலாவை எதிர்த்த பன்னீர் செல்வத்துக்கு தற்போது 5 எம்,எல்.ஏகள் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் கைகொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீஷன் “சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு திமுக ஆதரவளிக்கும்” என்று அறிவித்துள்ளார்.
Comments