சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில் – மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்!
சிங்கப்பூரில் திடீரென தோன்றிய அரிய தோற்றம் கொண்ட தீ வடிவிலான வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
சிங்கப்பூரின் வடகிழக்கே நேற்று மாலை 5 மணியளவில் ஒரு மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் ஒருவகை தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி பின்னர் மறைந்தது.
சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவலை வெளியிட்டது. ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.
Yorumlar