துருவ நட்சத்திரம் என்ன தான் நடக்குது- விக்ரம் ஓபன் டாக்!
![](https://static.wixstatic.com/media/d572ed_01acd411066b4260ae4c24c1efc7b798~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_01acd411066b4260ae4c24c1efc7b798~mv2.jpg)
துருவ நட்சத்திரம் படத்தை எப்படியாவது வெற்றிகரமான சூப்பர் ஹிட்டாக ஆக்க வேண்டும் என்ற வெறியில் கவுதம் மேனன் இருக்கிறார். இந்த ஸ்க்ரிப்ட்டினால் தான் சூர்யா கவுதம் மேனனை காயப்படுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த வடு இன்னும் கவுதம் மேனனிடம் இருக்கிறது.
துருவ நட்சத்திரத்தில் விக்ரம், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இணைந்ததே ஒரு ஆச்சரியம் தான். ஹாரிஸின் இசையில், கலக்கலான டீசரை முதல் செட்யூலில் படம் இருக்கும்போதே பொங்கல் அன்று வெளியிட்ட கவுதம் தில் தான்.
அமெரிக்காவில் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. அதன் பின் ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த ‘துருவ நட்சத்திரம்’ ஷூட்டிங் ஸ்டாப் ஆனது.
பெரிதாக ஒண்ணுமில்லை.பணம் தான், சொன்னபடி கவுதம் சம்பளத்தை ரெடி செய்யவில்லையாம். அதனால் சண்டையாகி, ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, தாடி மீசை, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றி க்ளீன் ஷேவ் செய்து கொண்டு, வாலு பட இயக்குனர் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்று சொல்லப்பட்டது.
இப்போது விக்ரம் அதற்கு விளக்கம் தந்துள்ளார்.துருவ நட்சத்திரம் அடுத்த வாரம் ஷூட்டிங் துவங்க உள்ளது. கவுதமுக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லியுள்ளார்.
Comentários