தன் செல்லபிராணிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கும் “தல” தோனி !!
crazynewschannel
Feb 19, 2017
1 min read
தனது செய்கைக்கு ஏற்றபடி செல்லப்பிராணிகள் பயிற்சி செய்யும் வீடியோவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்ற இவர், தற்போது ஓய்வில் உள்ளார்.
இந்த இடைவேளையை தனது குடும்பத்தாருடன் ஜாலியாக கழித்துவரும் இவர், சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சில நாட்களுக்கு முன் தனது மகளுடன் புல் தரையில் தவழ்ந்த வீடியோவை வெளியிட்ட தோனி, தற்போது தனது செல்லப்பிராணிகளான நாய்களுக்கு டென்னிஸ் பந்தை வைத்து பயிற்சி அளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Comments