இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நாளை துவங்க உள்ளது.
ராஞ்சியில் முதல் முறையாக நாளை நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை விட கடந்த இரண்டு போட்டிகளின் 4 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் கோஹ்லி நாளைய போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments