“பன்னீர், தீபக், இரண்டுமே நடிகர்கள் தான்” டெல்லியில் ஸ்டாலின் பேட்டி!
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமையும்” என்றார்.
இது எப்படி சாத்தியம் என கேட்டபோது, “எல்லாம் நம்பிக்கை தான்” என திமுக தரப்பில் இருந்து பதில் வந்தது.
தீபக் திடீரென பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளது பற்றி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ” பன்னீர் செல்வம் தனது பதவி பறிபோன பிறகு ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும்” என்றார்.
“தீபக் தற்போது ஏதோ பேசியுள்ளார். எங்களை பொறுத்தவரை ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே சந்தேகம் எழுப்பி வருகிறோம்.” இவ்வாறு தெரிவித்தார்.
Comments