ஓ.பி.எஸ் வீட்டிற்கு சென்ற தீபா : ஆரத்தி எடுத்து வரவேற்ற முதல்வரின் மனைவி!
- crazynewschannel
- Feb 15, 2017
- 1 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சசிகலா சிறைக்கு செல்ல உள்ள நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் ஜெ. தீபா இருவரும் கைக்கோர்த்து செயல்பட தொடங்கியுள்ளனர். முன்னதாக, இருவரும், ஒரே காரில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட இருவரும் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றனர். அங்கு, முதல்வரின் மனைவி, தீபாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். இருவரும் அங்கு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இருவரும் இணைந்து, இன்று ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா இல்லாவிட்டாலும், எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக., தொடர்ந்து நிர்வகிக்கப்பட உள்ளது. இதனால், ஓபிஎஸ் அணிக்கு மேலும், சிக்கல் எழுந்துள்ளது.
இதன் காரணமாக தான், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அழைத்து வந்து, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ள ஒ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார். ஆனால், இது எந்தளவுக்கு பலன் அளிக்கும் என போகப் போக தான் தெரியும்.
Comments