மொத்தமாக 2000 கோடியை வசூலில் அள்ளிய தங்கல் திரைப்படம்..! இந்தி திரைப்பட வசூலில் மாபெரும் சாதனை…!!
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த படம் ‘தங்கல்’. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூபாய் 500 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 2000 கோடி வசூல் செய்துவிட்டது.
ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகளின் உண்மையான கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு சாதனையாக அடித்து உடைத்து தற்போது ரூபாய் 2000 கோடி வசூல் செய்யும் முதல் இந்தியப் படம் எனும் சாதனையையும் பெற்றுள்ளது.
2000 கோடி வசூலில் சீனாவில் மட்டுமே 1200 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படம் ஹாங்காங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments