கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளரை முத்தமிட்டு வெறுப்பேற்றிய விளையாட்டு வீரர்!
![](https://static.wixstatic.com/media/d572ed_479026c066544cfe96ae103c3e14f995~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_479026c066544cfe96ae103c3e14f995~mv2.jpg)
பிரெஞ்சு டென்னிஸ் வீரர் மேக்சைம் ஹாமு தன்னிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை முத்தமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு ஓபன் தொடரில் கடந்த திங்களன்று நடைபெற்ற போட்டியில் ஹாமு தோல்வியடைந்ததை தொடர்ந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, நேற்று மாலை ஹாமை பிரபல தனியார் தொலைகாட்சி சார்பில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி கண்டார். மாலியல் தாம்ஸ் என்னும் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே திடீரென ஹாமு அந்த பெண் நிருபரை கட்டியணைத்து முத்தமிட தொடங்கினார். நேரலையில் இவ்வாறான மோசமான செயலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சி மட்டும் நேரலையாக இல்லாமல் இருந்திருந்தால் ஹாமுவை அதே இடத்தில் அறைந்து இருப்பேன், நேரலையில் ஒளிப்பரப்பானதால் மட்டுமே தான் பொறுமையாக இருந்ததாக அந்த பெண் பத்திரிக்கையாளர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த 2016 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments