பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் நவ்ஷிரா என்ற பகுதியில் பள்ளிக்குழந்தைகள் கடந்த ஜனவரி 28ல், கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறு பிரச்சனை வாக்குவாதமாக வெடித்துள்ளது. இதை அவர்களின் குடும்பத்தினர் பார்த்து தடுக்க சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தின் உச்சமாக ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஒருவர் துப்பாக்கியை எடுத்து மூன்று பேரை சுட்டுவிட்டார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். குண்டு அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Hozzászólások