தேனீகளால் கூட காப்பாற்ற முடியவில்லை !! 163 ரன்களில் சுருண்டது இலங்கை
![](https://static.wixstatic.com/media/d572ed_4eb3734932ea4568bc797a4e90a7b951~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_4eb3734932ea4568bc797a4e90a7b951~mv2.jpg)
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இலங்கை தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜோகஸ்பெர்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 26.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் மைதானத்திலேயே முகத்தை மூடி கொண்டு படுத்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் தடைபட்டு மீண்டும் துவங்கிய போட்டி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 163 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர். இதனால் இலங்கை ரசிகர்கள் இதுக்கு பேசாம தேனீக்கள் போகாமலே இருந்திருக்கலாம் என்று புலம்பும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
コメント