பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி மருந்து உராய்வு காரணமாக நிகழ்ந்த இந்த வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தொழிற்சாலை உரிமையாளர் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments