சென்னை சட்டம் ஒழுங்கு நிலவரம் : அறிக்கை கேட்கும் ஜார்ஜ்!
சென்னையில் சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்த சில ரவுடிகள் திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று காலை முதல் விடிய விடிய வாகன சோதனை மற்றும் நட்சத்திர ஓட்டல், சொகுசு பங்களா பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் யாரேனும் சமூக விரோதிகள் மற்றும் வெளிமாநில ரவுடிகள் உள்ளனரா என்று போலீசார் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று 10 மணிக்குள் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை போலீஸ் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Comments