ஒரே இந்திய ராக்கெட்டில் 104 செயற்கைகோள்! நடுநடுங்கிவிட்டதாக சீனா ஒப்புதல்!
![](https://static.wixstatic.com/media/d572ed_c681d51a526f45bc9983d2d01e1d811c~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_c681d51a526f45bc9983d2d01e1d811c~mv2.jpg)
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோளை ஏவிய இந்தியாவின் அதிரடி செயல்பாடு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இதற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்தாலும், இந்த நிகழ்வு இந்தியாவிற்கு புதிய நற்பெயரை கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.
கார் முதல் குண்டூசி வரை தயாரிக்கும் சீனா, இந்தியாவின் இந்த புதிய வணிக வெற்றியால் நடுநடுங்கியுள்ளது.
இதுகுறித்து ஷாங்காய் பொறியியல் மையத்தின் இயக்குநர் கூறுகையில் இந்தியாவின் இந்த வெற்றி விண்வெளி தொழில்நுட்ப போட்டியை வலிமையாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
சீனாவின் அரசு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள விண்வெளி ஆய்வு அதிகாரிகள், சீனாவும் எதிர்காலத்தில் இதுபோன்ற வணிக ரீதியிலான செயற்கைகோள்களை ஏவும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அவை தீவிரம் அடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர். தற்போது வரை சீனாவை விட இந்தியா இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டதாக கூறியுள்ளனர்.
Comentarios