தூத்துக்குடி வளர்ந்து வரும் பெரிய நகரமாகும் தென்னிந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பெருமளவு ஏற்றுமதியாகும்.
அதேபோல தொழில் ரீதியாக தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தினமும் வருவதற்கு விமான சேவைகள் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விமான சேவைகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஏர்கானிவல் என்ற நிறுவனம் தூத்துக்குடி – சென்னைக்கு விமான சேவையை துவக்கியுள்ளது.
அதன்படி தினசரி மாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 72 பயணிகள் பயணிக்கலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Kommentare