இந்தியாவில் 20,000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி -மத்திய அமைச்சர் அறிவிப்பு!
![](https://static.wixstatic.com/media/d572ed_07087d9da46a4a04b33d5290abfd86a3~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_07087d9da46a4a04b33d5290abfd86a3~mv2.jpg)
இந்தியா அடுத்த 15 மாதங்களில் 20,000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி செய்யும் என்று, மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இதுகுறித்து, விளக்கம் அளித்த பியூஸ் கோயல், இந்த மாதம் 10ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவின் சோலார் மின் உற்பத்தி அளவு 10,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது. இது 3 வருடங்களுக்கு முந்தைய அளவைவிட, நான்கு மடங்கு அதிகமாகும். தற்போதைய நிலையில், 14,000 மெகாவாட் அளவிலான சோலார் மின் உற்பத்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
2016ஆம் ஆண்டில் 4 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2017ஆம் ஆண்டில் அது 8.8 ஜிகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அளவிலான சோலார் மின்சாரமும், 60 ஜிகாவாட் அளவிலான காற்றாற்றல் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு நிர்ணயித்துள்ளது. அதேபோல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 175 ஜிகாவாட்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், மின்சார துறையின் மேம்பாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த உதவிகள் தேவை என்று பியூஸ் கோயல் தெரிவித்தார்.
Comentarios