பேருந்து கவிழ்ந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் திருமால்பூரில், திருத்தணி – காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த பேருந்தை ஓட்டிவந்த டிரைவர், சாலை வளைவில் செல்லும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து தலைகீழாய் கவிழ்ந்து நொறுங்கியது.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, இந்த பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக, இவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
コメント