சிரியாவில் வெடிக்குண்டு தாக்குதல் – 25 பேர் பலி!
![](https://static.wixstatic.com/media/d572ed_d77896730cd045149c30e1df74379661~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_d77896730cd045149c30e1df74379661~mv2.jpg)
சிரியாவில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின், ஹமிடியே மாவட்டத்தில் உள்ள டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பை மீறி நுழைய முயன்றுள்ளான்.
காவல்துறையினர் அவனை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவன் தன்னிடம் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த குண்டு வெடிப்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த 25 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலின், பின்னணி குறித்து சிரிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
கடந்த சனிக்கிழமை டமாஸ்கஸ் நகரில், இரட்டை தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு ஜிகாதி தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அந்த தாக்குதல் நடந்த 5வது நாளில் மீண்டும் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments