இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி 2 படத்தின் ரிலீஸில் படு பிஸியாக இருக்கிறார். ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா, மெக்சிகோ, கரிபியன், சென்ட்ரல் அமெரிக்கா மற்றும் இந்தியா என்று கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
அத்தோடு, கிட்டத்தட்ட 50 ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.இயக்குனர் ராஜமௌலியும் ப்ரொடியூசர் ஷோபுவும் இன்றைக்கு அந்த ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கு புது போஸ்டரை மும்பையில் வெளியிட்டுள்ளார்கள்.
பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு அவ்வளவு ரசிகைகள் கிரேஸாம். சமீபத்தில் மும்பை வந்த பிரபாஸை ஏர்போர்ட்டிலேயே பெண்கள் கூட்டம் சுற்றி வளைத்துக்கொண்டதாம். அவ்வளவு எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பாகுபலி 2 ஐமேக்ஸ் அனுபவத்தையும் தந்து அசத்தப்போகிறது.
Comments