ட்ரைலரில் பாருங்க என்றார் ராணா, எங்க பார்க்கறது அனுஷ்கா பண்ற பிரச்சனையில்…
![](https://static.wixstatic.com/media/d572ed_79ef8bbc5b6d40f8bcb9325b3fdfe895~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_79ef8bbc5b6d40f8bcb9325b3fdfe895~mv2.jpg)
பாகுபலி 2 எப்போ வரும் வரும்ன்னு கேட்டவங்க எல்லாம், வந்த போஸ்டரை பலமா கலாய்ச்சி விட்டுட்டாங்க. அந்த போஸ்டரில் ஹீரோ பிரபாஸும், ஹீரோயின் அனுஷ்காவும் வில் அம்போடு இருக்கிறார்கள்.
எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் பாகுபலியின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்காக ப்ரோமோஷனை ஆரம்பித்த படக்குழு போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்தவர்களால் அனுஷ்கா இவ்வளவு ஒல்லி இடுப்பழகியாகவா? நம்ப முடியலை, இது போட்டோசாப் பண்ணப்பட்டது அல்லது மூணு வருசத்துக்கு முன்னவே எடுத்ததாக இருக்கணும் என்று ஸ்டில்லை பார்த்தவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
அனுஷ்கா இஞ்சி இடுப்பழகிக்காக ஏற்றிய எடை இன்னும் குறையவில்லை. கொஞ்சம் பூசியது போல் தான் இருக்கார்.
இந்த நிலையில், ராணாவிடம் போஸ்டர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையே என்றார்கள். அதற்கு ட்ரைலரை பாருங்க என்றாராம்.ஆனால், ட்ரைலரிலும் பிரச்சனை தானாம்.
அனுஷ்க்கா போட்ட வெய்ட் இன்னும் குறையலை, அதுக்காக வெய்ட் பண்ணமுடியுமா? அவர் வரும் காட்சிகளில் நிறைய கிராபிக்ஸ் ஒர்க் நடந்து வருதாம் . அதனால் ட்ரைலர் லேட்.
Comments