ஓட ஓட அடித்த குணரத்னே : சொந்த மண்ணில் தொடரை இழந்தது ஆஸி!
- crazynewschannel
- Feb 19, 2017
- 1 min read

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 சர்வதேச டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்றது.இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் தரங்கா, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.அதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் விடாமல் போராடிய குனரத்னே, ஹென்ரிஸ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் ’ஹாட்ரிக்’ சிக்சர், ஒரு பவுண்டரி என 22 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிமிடத்திலும் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவின் பந்தை சிதறடித்து அதிரடியாக விளையாடிய குணவர்த்தனே கடைசி பந்தில் 4 அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.
Comments