அஸ்வின வச்சு தான் இந்தியாவையே வீழ்த்த போறோம்.. அடங்காத வங்கதேசம்...
![](https://static.wixstatic.com/media/d572ed_40f7a9734e114b249d658e066254b02b~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_40f7a9734e114b249d658e066254b02b~mv2.jpg)
இந்திய அணி சுழற் மன்னன் அஸ்வினை தான் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த போட்டி வரும் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடர்பான கருத்து தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மிராஜ் “இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உலகத்தரமான சிறந்த பந்துவீச்சாளர். அவரிடம் போட்டிக்கு பின் பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். தவிர, போட்டியின் ஒவ்வொரு நாளிலும் அவர் பவுலிங் செய்யும் போது மிகவும் கவனமாக கவனிப்பேன். பவுலிங்கில் அஸ்வினின் உக்திகளை தெளிவாக கவனித்து அதை மிகச்சரியாக பயன்படுத்துவேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவரது அணிக்கு எதிராக அவரையே ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Comments