மாணவி அனிதாவின் மரணம் தற்கொலையா? அரசின் சதியால் நடந்த மரணமா?
நீட் தேர்வை தடை செய்யக்கோரி பல தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்த்துவிட்டது என்று மாணவி அனிதா தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவி அனிதா மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி அனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட செய்தி அறிந்து தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றூம் மாணவ அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று கோசங்கள் எழுப்பியவாறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு உண்மையிலேயே மத்திய மாநில அரசுகளே காரணமாக இருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் பிளச் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதா நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெறாமல் இருந்திருக்க முடியும்? தனது உரிமைக்காக் அரசுக்கு எதிராக தைரியமாக வழக்கு தொடர்ந்த ஒரு பெண் இவ்வாறு கோழத்தனமான முடிவை எடுக்க காரணம் என்ன? என பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இவ்வாறு இருக்கும் நிலையில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு அரசின் சதியே காரணமாக இருக்கும் என்று ஒரு தகவல் உலா வருகின்றது. அனிதா அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததே அனிதாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அனிதா அரசியல்வாதிகளால் மிரட்டப்பட்டார அல்லது கனவுக்காக தற்கொலை செய்துக்கொண்டாரா?உண்மையில் எது மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது தனது கனவுக்காக உயிரையை மாய்த்துக்கொணட அந்த ஆன்மாவிற்கே தெரியும்.
Commentaires