பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலியால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தர்மபுரியில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார். திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளனர்.உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் மருத்துவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.
Коментарі