காலணியில் ஓம் மந்திரம், பீர் பாட்டிலில் பிள்ளையார் படம் – இந்துக்களை கோபப்படுத்திய அமெரிக்க நிறுவனங்
ஷூக்களில், ஓம் மந்திரம் மற்றும் பீர் பாட்டிலில் பிள்ளையார் படத்தை அச்சடித்து விற்பனைக்கு வெளியிட்ட அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான், இந்திய தேசியக் கொடி பதித்த கால் மிதி ஒன்றை கனடா நாட்டின் இணையதளத்தில் வெளியிட்டது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, இந்திய தேசியக் கொடி டிசைன் கொண்ட கால்மிதியை இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து, காந்தியின் முகம் பொறித்த செருப்புகளை விற்பனைக்கு வைத்தது. இந்தியர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தும் இந்த செயலுக்கு பலவகையிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த யெஸ்விவைப் என்ற ஆன்லைன் நிறுவனம் ஷூவில் ஓம் படமும், லாஸ்ட்காஸ்ட் என்ற நிறுவனத்தின் பீர் பாட்டிலில் பிள்ளையார் படமும் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இது இந்து மதத்தினரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி அந்நிறுவனத்திற்கு இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து , டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலரும், சாரணர் இயக்க கமிஷனருமான நரேஷ் கதியான், விஹார் பகுதி காவல்நிலையத்தில் அந்நிறுவனங்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, அமெரிக்கா நிறுவனங்கள் மீது, தீய செயல்களுக்கு தூண்டுவது, மத நம்பிக்கைகளை அவமதிப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Commentaires