அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்..!
![](https://static.wixstatic.com/media/d572ed_c28076dad20841afb6bc5efedd59688a~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_c28076dad20841afb6bc5efedd59688a~mv2.jpg)
சிரியாவில் அண்மையில் அரசுப் படையினர் நடத்திய ரசாயனக் குண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் கூட அப்பாவி பொதுமக்களே பரிதாபமாக உயிரை விட்டனர்.
இந்தத் தாக்குதலை சிரிய ராணுவம் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய போதிலும் சிரிய ராணுவமும் சிரிய அதிபரும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தனர்.
எனினும் சிரிய ராணுவம்தான் ரசாயனக் குண்டு தாக்குதலை நடத்தியது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது அமெரிக்கா, ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 60 கப்பல் ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ரசாயனக் குண்டு தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது
Comentarios