சசிகலா முன்பே பன்னீருக்கு வாழ்த்து கோஷம்.. கூவத்தூர் பொதுமக்களால் ஆடிப்போன சசிகலா !!
![](https://static.wixstatic.com/media/d572ed_4305502e6fe345f9b95c6c089d54dee8~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_4305502e6fe345f9b95c6c089d54dee8~mv2.jpg)
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் நேற்று முன்தினம் சசிகலா கடிதம் அளித்து இருந்தார். இதுவரை ஆளுனர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இன்று மீண்டும் சசிகலா ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார். எம்.எல்.ஏக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வேலை மற்றும் அலுவலகத்திற்கு செல்வோரால் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சசிகலா வருகையையொட்டி அப்பகுதி கிராம பகுதி மக்களை அப்பகுதியில் நுழைய விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சசிகலா அங்கு தடையை மீறி திரண்டனர்.
அப்போது பொதுமக்கள் சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் சசிகலா முன்பாகவே பன்னீர் செல்வத்திற்கு வாழ்க கோஷம் எழுப்பி அதிர வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Yorumlar