சசிக்கு ஆதரவு இல்லை எம்.எல்.ஏக்கள் திட்டவட்டம்: சமாதானம் செய்யும் முயற்சியில் சசிகலா.!
- crazynewschannel
- Feb 11, 2017
- 1 min read

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கட்டாயப்படுத்தி பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்.
இதன் பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து அதிமுகவில் இரண்டாக பிளவு ஏற்பட்டது.
ஒரு அணி சசிகலாவிற்கும் மற்றொரு அணி பன்னீர்செல்வம் என இரண்டாக பிரிந்து உள்ளது. தற்போது ஓ.பி.எஸ்க்கு 6 எம்.எல்.ஏ மற்றும் 2 எம்.பி நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா நேரடியாக கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனாலும் சசிகலாவை பல எம்.எல்.ஏக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் செய்வதறியாமல் அவர் திகைத்து வருகின்றார். முதல்வர் பதவி பகல் கனவாகவே போய்விடுமோ என்ற மனநிலையில் உள்ளார்.
Comments