விவேகம் ஷூட்டில் அடிபட்டுவிட்டதா அஜித்துக்கு? Crazy News ஸ்பெஷல்!
அஜித் இப்போது பல்கெரியாவில் 45 நாட்கள் ஷூட்டில் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பல்கெரியா சென்றவர், உடனே ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். தற்போது அஜித்தின் ஆக்சன் சீன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வளவு தான் ஒரு தகவலோ, ஸ்டில்லோ வெளிவரக்கூடாது என்று இயக்குனர் சிவா ஸ்ட்ரிக்ட்டாக இருந்தாலும், படப்பிடிப்பின் ஒரு ஸ்டில் வெளியாகி வைரல் ஆக ஆரம்பித்துள்ளது. எப்படிப்பா இப்படி நடக்கிறது என்றாலும் வேறு வழியில்லை என்று இன்னும் சீன் கள் லீக் ஆகாமல் இன்னும் கடுமையை கூட்டியுள்ளார்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்.
இந்த ஸ்டில் வெளிவந்தவுடன் அஜித் ரசிகர்கள் தலைக்கு உண்மையிலேயே காயம் பட்டுவிட்டதோ என்று கமெண்டுகளால் சமூக வலைத்தளத்தை நிறைத்துவிட்டார்கள்.
ஆனால், இப்படி தத்ரூப மேக்கப்பாம். ஏற்கனவே 29 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தானே ஸ்டாண்ட் செய்த அஜித், இப்போதும் முடிந்தவரை தானே ஸ்டன்ட் பண்ணுகிறாராம்.
コメント