நாடு முழுவதும் இலவச ரோமிங்: ஏர்டெல் புது உத்தரவு.!
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு சென்றால் இன்கமிங் கால், மற்றும் அவுட்கோயிங் கால்களுக்கு சர்வீஸ் சார்ஜ் எடுப்பது வழக்கம்.
இந்நிலையில், புதியதாக ஜியோ நெட்வொர்க் வந்த பின்னர் நாடு முழுவதும் கால்கள் மற்றும் இண்டர்நெட் சேவைகளுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக அளித்து வந்தது. இதன் காரணமாக ஜியோ நெட்வொர்க்கை 10 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தது. இதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் இலவச ரோமிங் சேவையை வழங்குவதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுனில் தெரிவித்துள்ளார்.
Comments