அகமதாபாத்தில் பெரும் விமான விபத்து? 400 பயணிகளின் நிலை?
![](https://static.wixstatic.com/media/d572ed_d0606a85021940408d1717ac5a207221~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_d0606a85021940408d1717ac5a207221~mv2.jpg)
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 400 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானம் மீது மோதும் வகையில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இருந்து நேற்று இரவு துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது விமானம் ஓடுபாதையில் வேகமாக ஓடியபோது அந்த ஓடுபாதையில் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு விமானம் நின்றது.
அதனைக்கண்ட அதிகாரிகள் பதற்றமடைந்தனர். உடனடியாக ஸ்பைஸ் ஜெட் விமானியை தொடர்புகொண்டு எச்சரித்தனர். சுதாரித்துக் கொண்ட விமானியும் அவசர பிரேக்கை இயக்கி விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால், அங்கு நின்று கொண்டிருந்த ஏர் இண்டிகோ விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் விமானம் பயங்கரமாக மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments