அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 136 எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் சசிகலாவை சட்டமன்றகட்சித் தலைவராக பன்னீர் செல்வம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.
Comments