எம்.எல்.ஏக்களிடம் மிரட்டி கையெழுத்து: எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் விசாரணை!
![](https://static.wixstatic.com/media/d572ed_fa0603a6ebe843109cab7a26fa2c1786~mv2.jpg/v1/fill/w_696,h_391,al_c,q_80,enc_auto/d572ed_fa0603a6ebe843109cab7a26fa2c1786~mv2.jpg)
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். சசிகலா தரப்பிலும் மற்றொரு தரப்பில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலும் ஒரு அணியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி ராயப்பேட்டையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த பின்னர் அனைவரையும் அமைச்சர் எடப்பாடி வீட்டுக்கு அழைத்து சென்று வெள்ளை காகிதத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்டுக்கு பேருந்தில் அழைத்து செல்லும்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் பேருந்தில் இருந்து வெளியேறி ஓ.பி.எஸ் வீட்டுக்கு சென்று ஆதரவை தெரிவித்தார்.
அதன் பின்னர் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பழனிச்சாமி எம்.எல்.ஏக்களை வீட்டுக்கு அழைத்துசென்று வெள்ளை காகிதத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில் எடப்பாடி வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தியபின் ஒரு சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
コメント