சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அதிமுகவினர் தீவிரம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை சட்டபேரவையில் நிரூபித்தார். இதனையடுத்து அவரது தலைமையில் ஆட்சி நிலையாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் இன்று மாலை போயஸ்கார்டனில் துணைபொதுச்செயலாளர் திவாகரன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Comments