அதிமுக தான் என்றுமே தமிழகத்தை ஆள வேண்டும் – சசிகலா கர்ஜனை
crazynewschannel
Feb 15, 2017
1 min read
அதிமுக தான் தமிழகத்தை எப்போதும் ஆள வேண்டும் என்று கட்சியின் தற்போதைய பொது செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனுக்கு திரும்பினார். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும் என்றும், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அதிமுகவை யாராலும் பிரிக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவின் பயணத்தை தொடர வேண்டும் என்று கட்சியினருக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமில்லாமல் நான் எங்கிருந்தாலும், அதிமுகவை வழிநடத்துவேன் என்றும் அவர் கூறினார்.
Comentários