இரட்டை இலை சின்னம் எங்களுக்கே, தினகரனுக்கு கிடையாது – ஓ.பி.எஸ் அதிரடி!
- crazynewschannel
- Mar 15, 2017
- 1 min read

ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்திக்க டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரிக்கை வைக்கப்போவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம், “ ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் எங்கள் தரப்பு வேட்பாளர் குறித்து, ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கூட்டி விரைவில் அறிவிக்கப்படும்” என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
அவருடன் மூத்த தலைவர்கள் நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன்,அசோக்குமார் சுந்தரம், என 9 பேர் கொண்ட குழுவும் சென்றது.
Comments