‘‘ஆதார் எண் கொடுத்தால் வேலை ரெடி’’ மைக்ரோசாப்ட் அதிரடி...
crazynewschannel
Feb 22, 2017
1 min read
இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்தியா நாதெல்லா, புராஜக்ட் சங்கம் என்னும் முக்கிய திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்தியா நாதெல்லா கூறுகையில், வேலை தேடுவோருக்கு என புராஜக்ட் சங்கம் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த புராஜக்ட் சங்கம் என்பது என்னவெனில் வேலைதேடுவோர் தமது ஆதார் எண்ணைக்கொண்டு லிங்க்டு இன் இணையதளத்தில் தமக்கான கணக்கினை துவங்க வேண்டும். அதில் விருப்பமான துறையை தெரிவு செய்யலாம். இதன்மூலம் பாடங்களை டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.
பயிற்சிகள் முடிந்த பின்னர் லிங்க்டு இன் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களின் விபரங்களை அடிக்கடி தெரிந்துகொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments