ஸாரி….என்னிடம் அப்படி எல்லாம் கேட்கக் கூடாது .. நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள!!
- crazynewschannel
- Mar 17, 2017
- 1 min read

நடிகை பாவனா கடந்த மாதம் 17ம் தேதி திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிய போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாவனா பாலியல் கொடுமைக்கு பிறகு சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் தொடர்பான சில காட்சிகளை பாடகி சுசி வெளியிட்டார்.
இது தமிழக திரையுலகத்தை புரட்டிப்போட்டது. அதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரி எனக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தாக கூறி பின்பு நான் கூறவில்லை என மறுத்தார்.
நடிகை சாய் பல்லவி கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, 2015ம் ஆண்டில் மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் களி, தமிழில் நடிகர் கார்த்தியுடன் நடித்து வருகிறார். நடிகைகள் பாலியல் தொடர்பான கருத்துக்கு பிறகு இவரே தனது செல்போனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகிறார்.
யார் நம்பர் கேட்டாலும் என்னிடம் ஃபோன் இல்லை என்று கூறி அம்மாவின் நம்பரை கொடுத்து வருகிறார். உங்கள் நம்பரை கேட்ட உங்கள் அம்மா நம்பரை தருவதாக கூறி கோலிவுட் நடிகர் சிலர் கடுப்பாகி வருகின்றனர்.
Comentarios