பிரதமர் மோடி, நடிகை பிரியங்கா சோப்ரா ஜெர்மனியில் திடீர் சந்திப்பு..!
இந்திய பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ரஷ்யா,ஸ்பெயின் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல் நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மன் சென்றார்.
ராக் ஜான்சன் , பிரியங்கா சோப்ராவின் “பேவாட்ச் ” ஹாலிவுட் திரைப்படம் வருகிற 2ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷனுக்காக பிரியங்கா ஜெர்மனியில் உள்ளார்.
ஜெர்மனின் பெர்லின் நகரில் பிரதமர் மோடியும் பிரியங்கா சோப்ராவும் தற்செயலாகச் சந்தித்து பேசியுள்ளனர். பிரதமர் மோடியுடன் பிரியங்கா சோப்ரா புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments