கோடியில் தமிழன் கொட்டி கொடுக்கிற காசெல்லாம்,வெளிநாட்டு காரால்ல கிடக்கு?
![](https://static.wixstatic.com/media/d572ed_bdd0ae439f1646ab81ce6936374dc14e~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_bdd0ae439f1646ab81ce6936374dc14e~mv2.jpg)
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவான்னு சும்மாவா பாடினார் ரஜினி? தமிழன் பார்க்கும் ஒவ்வொரு சினிமா டிக்கெட்டிலும், நடிகர்களின் சொகுசு வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை முறையே மாறிப்போகிறது. அவர்கள் வைத்துள்ள கார்களின் வகைகளை பாருங்கள். ஒவ்வொரு காரும் அரை கோடியில் தான் தொடங்குகிறது. ஒரு கார் இல்லை, பல கோடி ரூபாயை தன் போர்டிகோவில் நிறுத்தி வைத்துள்ள நடிகர்களின் கார்களை பாருங்கள். கமல் சொகுசு கார்களின் பிரியர். இவரிடம் BMW 7 சீரிஸ், ரேஞ்ச்ரோவர் இவோக், ஆடி A8, ஹம்மர், லேண்ட் க்ரூஸர் பிரேடோ என்று பெரிய தொகை கார்களை வைத்துள்ளார். விஜய் ஆடி, ஹம்மர், ரோல்ஸ்ராய்ஸ், ரேஞ்ச்ரோவர் இவோக், நிஸான், ஜாகுவார், மினிகூப்பர் வைத்துள்ளார். ரஜினி கபாலிக்கு பின் வாங்கிய BMW X3, இன்னோவா, உதயநிதி ஹம்மர். சந்தானம் ரேஞ்ச்ரோவர். த்ரிஷா BMW . யுவன் சங்கர் ராஜா BMW AW650இ , ஆஸ்டின் மார்ட்டின். சிவகார்த்திகேயன் ஆடி Q7, ரேஞ்ச்ரோவர் இவோக் வைத்துள்ளார் . நாசர், BMW 3 . இயக்குநர் பாரதிராஜா BMW , இனோவா க்ரிஸ்டா வாங்கியிருக்கிறார். வைரமுத்து, BMW . கே.எஸ்.ரவிக்குமாரும் ரஞ்சித்தும் ஜாகுவார் XF வைத்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் ஹம்மர், லம்போர்கினி. ஜி.வி.பிரகாஷ் ஜாகுவார். மாதவன் , கார்த்தி பென்ஸ். சூர்யா, ஜோதிகா ஆடி க்யூ7 ,பிஎம்டபிள்யூ 5 பெரும்பாலான நடிகைகள் BMW தான் வைத்துள்ளனர்.
Comments