அஜித் மாதிரி அழும்பு பண்ணும் விஜய்- படக்குழு பதட்டம்!
![](https://static.wixstatic.com/media/d572ed_fe60bcff89cc42b4b0437156400f871e~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_fe60bcff89cc42b4b0437156400f871e~mv2.jpg)
அஜித் விவேகம் படத்தில் ஷூட்டிங்கின்போது 29 வது மாடியிலிருந்து டூப் இல்லாமல் குதித்து ஒரு சண்டை காட்சியில் நடித்தார்.
ஆரம்பம் படத்தில் இப்படித்தான் அஜித் டூப்பின்றி ஓர் கார் ரேஸிங் சண்டை காட்சியில் நடித்து அடிபட்டார். எத்தனை அடிபட்டாலும் அஜித் ரிஸ்க் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகிறார்.
அது போன்றே விஜய் இப்போது ஆரம்பித்து உள்ளார். விஜய் தன்னுடைய 61 வ து படத்தை அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். சமந்தா , காஜல் அகர்வால், நித்யா மேனன் என்று மூன்று ஹீரோயின்கள்.
தற்போது சென்னை அருகில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பிளாஷ் பேக் போர்ஷன் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் ஒரு சண்டைக்காட்சிக்கு தான் விஜய் அவ்வளவு ரிஸ்க் எடுத்து உள்ளார். டூப் போட்டு எடுப்போம் என்றதை வேண்டாம் என்று சொல்லி நடித்ததால், அந்த ஷூட் முடியும் வரை படக்குழு பதட்டமாகவே இருந்ததாம்.
Comments