ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்தனர் நடிகர்கள் ராமராஜன், தியாகு – பெரம்பலூர் எம்.பியும் ஆதரவு !
வேலூர், தூத்துக்குடி எம்.பிக்களை தொடர்ந்து பெரம்பலூர் எம்.பி முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று காலை வேலூர் அதிமுக எம்.பி செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி அதிமுக எம்.பி ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது பெரம்பலூர் எம்.பி மருதராஜா, முதல்வர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தார்.
இவர்களுடன் சேர்ந்து நடிகர் ராமராஜன் மற்றும் நடிகர் தியாகு ஆகியோரும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Commentaires