சென்னை வானகரத்தில் ஏசி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.!
![](https://static.wixstatic.com/media/d572ed_7bed242c459a4428b36afe8cdef3e49a~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_7bed242c459a4428b36afe8cdef3e49a~mv2.jpg)
சென்னை அருகே உள்ள வானகரத்தில் இயங்கி வரும் ஏசி தொழிற்சாலையில் சிறிய அளவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.
அதன் பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. அதையடுத்து தீ கொளுந்துவிட்டு எரிந்து அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீ அருகில் உள்ள ரசாயன தொழிச்சாலைக்கும் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து வானகரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், தீ பரவாமல் தடுக்க ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
Comments