SBI வங்கி ATM-ல் வரம்பு மீறி பணம் எடுத்தால் ரூ.50 அபராதம்!
- crazynewschannel
- Mar 3, 2017
- 1 min read

ஏப்ரல் 1 முதல் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களும் வரம்பிற்கு அதிகமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 15 முறையும் மற்றும் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிமாற்றங்கள் செய்பவர்கள் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். வரம்பு மீறினால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இணையதள வங்கி பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் 1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப்பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம்.
இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
தனியார் வங்கிகள் அறிவிப்பை தொடர்ந்து எஸ்.பி.ஐ.,வங்கியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Comentarios