ஏக்கருக்கு ரூ.7,000 நிவாரணம்; விவசாயிகள் வங்கிக்கணக்கில் உடனடி டெபாசிட்...
![](https://static.wixstatic.com/media/d572ed_a5accf9870ac400e95def22d4fa8ee24~mv2.jpg/v1/fill/w_980,h_552,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/d572ed_a5accf9870ac400e95def22d4fa8ee24~mv2.jpg)
தமிழக முழுவதும் வறட்சியால் பல ஏக்கர் பயிர்கள் கருகி நாசமானதால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்தனர்.
இதனால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி பல்வேறு போராட்டங்களும் நடந்துவந்தன. தமிழகத்தின் அரசியல் நிலவரம், நிலையான முதல்வர் அமையாததால் நிவாரணம் வழங்குவதில் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கூட்டம் முடிந்த நிலையில், தற்போது விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கூறுகையில், மொத்தம் 16,628 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதித்துள்ளன. 28லட்சத்து 99 ஆயிரத்து 877 விவசாயிகளுக்கு 46 லட்சத்து 27 ஆயிரத்து 142 ஏக்கருக்கு ரூ.2,247 கோடி நிவராணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிர் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 ஆகவும், மானவரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வரையிலும், நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7,287 ஆகவும் நிவாரணத்தொகை வழங்கப்படும்.
சுமார் 32 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனே நிவாரணத் தொகை செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Comments