இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம்..!
சேமிப்பு கணக்கிலிருந்து இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த பிப்ரவரி 8 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் என கூறியிருந்தது.
மேலும், மார்ச் 13 ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதையடுத்து இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது.
Comments