4 பந்துகளுக்கு 92 ரன்கள் அப்பப்பா! வாரி வழங்கிய வள்ளல் பவுலர் !
![](https://static.wixstatic.com/media/d572ed_d1bce5c7fe264548b46098ab5c686716~mv2.png/v1/fill/w_557,h_308,al_c,q_85,enc_auto/d572ed_d1bce5c7fe264548b46098ab5c686716~mv2.png)
வங்கதேசத்தில் நடைபெற்ற கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெறும் 4 பந்துகளுக்கு 92 ரன்களை வழங்கியுள்ளார் சுஜாம் முகமது என்னும் பவுலர்.
இரண்டாம் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள் வங்கதேச தலைநகர் தாகாவில் நடைபெற்றது. இதில் லால்மதியா, ஆக்ஷியாம் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய லால்மதியா அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனை தொடர்ந்து 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எதிரணி வீரர்களுக்கு வேலை வைக்க விரும்பாத லால்மதியா அணியின் பவுலர் சுஜாம் முகமது, முதல் ஓவரிலேயே 15 நோ-பால், 13 வைடு பவுண்டரிகள் உட்பட 65 ரன்கள், சரியாக வீசப்பட்ட நான்கு பந்துகளில் 12 ரன்கள் என நான்கு பந்துகளில் மொத்தமாக 92 ரன்கள் வழங்கி எதிரணியை ஈசியாக வெற்றி பெற வைத்துள்ளார்.
![](https://static.wixstatic.com/media/d572ed_5ae45f8acde24aff97b05b614177656b~mv2.png/v1/fill/w_526,h_339,al_c,q_85,enc_auto/d572ed_5ae45f8acde24aff97b05b614177656b~mv2.png)
போட்டிக்கான டாஸ் போடப்பட்டிதலிருந்தே போட்டி நடுவர் தங்கள் அணிக்கு எதிராகவே செயல்பட்டாதகவும் அவரை பழி தீர்க்கவே இப்படி பந்துவீசியதாகவும் அந்த அணியின் மூத்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?
Comentarios