நீங்களே முதல்வராக தொடரவேண்டும் : ஒரே நாளில் 35 லட்சம் பேர் ஆதரவு – ஓ.பன்னீர்செல்வம் உற்சாகம்!
- crazynewschannel
- Feb 13, 2017
- 1 min read

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் சிறப்பாக 2 மாதங்கள் ஆட்சி செய்தார் என்று பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் மீண்டும் நீங்களே முதல்வராக தொடரவேண்டும் என்று பொதுமக்கள் அவரது இல்லத்துக்கே சென்று ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இது வரைக்கும் தமிழகத்தில் இருந்து 35 லட்சம் பேர் போன் மூலம், மற்றும் அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று 3 லட்சம் பேர் என பன்னீர்செல்வத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் தமிழர்கள் ஆதரவை போன் மூலம் தெரிவித்தனர்.
அதிமுக எம்.பிக்கள் நேற்று மட்டும் 5 பேர் ஒரே நாளில் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஆதரவு தொடரும் என்பதால் அவரது இல்லம் இருக்கும் கிரீன்சாலையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி கொண்டே வருவதால் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டு வருகின்றார்.
コメント